/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 09, 2024 08:00 AM

வால்பாறை : வால்பாறையில் பருவமழைக்கு பின் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை, நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் ரகுராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில், காய்ச்சல், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. துப்புரவு அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் வீரபாகு மற்றும் துாய்மை இந்தியா திட்டபணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.