/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்குட்டைபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்
/
செங்குட்டைபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 01, 2025 07:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்:
கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் கொ.ம.தே.க. சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சி செங்குட்டைபாளையம் அரசு பள்ளியில் கொ.ம.தே.க. சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. இதில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, கொ.ம.தே.க. மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
இதில், இருதய நோய், புற்றுநோய், மகப்பேறு மருத்துவம், தோல் நோய், சிறுநீரக கோளாறு, குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், வரதனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.