/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் நாளை இலவச மருத்துவ முகாம்
/
வால்பாறையில் நாளை இலவச மருத்துவ முகாம்
ADDED : ஏப் 25, 2025 11:31 PM
வால்பாறை: வால்பாறை நகரில் நாளை நடைபெறும் இலவச மருத்துவ முகாமில், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வால்பாறை வட்ட வியபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொதுசெயலாளர் ஷாஜிஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாஸ் ஆகியோர் கூறியிருப்பதாவது:
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு இணைந்து நாளை (27 ம் தேதி) இலவச மருத்துவ முகாம் நடத்துகிறது.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில், பொதுமருத்துவம், பெண்கள் நலம், குழந்தைகள் நலம், காதுமூக்கு தொண்டை, எலும்பு முறிவு உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு இலவசமாக டாக்டர் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.
இம்முகாமில், வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள மக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இந்த வாய்ப்பை அப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.