ADDED : ஜூலை 20, 2025 10:42 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடை கன்னார்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில், நேற்று பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனை மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமினை மருத்துவமனையின் தலைவரும், பேரூர் திருமடத்தின் ஆதீனமும் ஆன தவத்திரு மருதாசல அடிகளார் தலைமையேற்று துவக்கி வைத்தார். மருத்துவமனையின் இயக்குநர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இம்முகாமில், பொது மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், எலும்பு பிரிவு, தோல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. டாக்டர்கள் லோகேஷ், சித்ரா, சத்யகிரமண், திவ்யதர்ஷினி மற்றும் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.----