நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள வெல்ஸ்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ணா மடம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் தலைமை தாங்கினார்.
டாக்டர் நந்தகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். சர்க்கரை, ரத்த அழுத்தம் இன்னும் பிற பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
நம்ம மேட்டுப்பாளையம் சமூகநலக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய்குமார், சுரேஷ் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் 100 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.------