ADDED : ஜூலை 14, 2025 11:07 PM

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே உள்ள சோமையனூரில் நடந்த இலவச பல்துறை சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாமில், 490 பேருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஈஷா ஆரோக்கிய அலை, தடாகம் பகுதி, பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை கே.எம்.சி.எச்., கல்லூரி மருத்துவமனை, கோவை ராவ் மருத்துவமனை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து முகாமை நடத்தியது. இதில், எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பெண்கள் நலம், பல் மருத்துவம், பொது மருத்துவம், ஆகிய தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனைகள், பொது பரிசோதனைகள் அளிக்கப்பட்டன. முகாமில், சர்க்கரை நோய் பரிசோதனை, இலவச மருத்துவ ஆலோசனை, இ.சி.ஜி., பரிசோதனை, மருந்துகள் ஆகியனவும் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாம் ஏற்பாடுகளை, பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சித்ரா சம்பத்குமார், செயலாளர் ராயப்பன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் இயக்குனர்கள் ரங்கநாதன், மகாலட்சுமி, பிரபு, நரசிம்மராஜ், மற்றும் ஈஷா மருத்துவ குழுவினர் செய்து இருந்தனர்.