தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வு


ADDED : செப் 13, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்காநல்லுார்: சிங்காநல்லுார் கிளை நுாலகம் மற்றும் சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., அலுவலகம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று நுாலகத்தில் நடந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ மாதிரித் தேர்வை, சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., கிரிபிரசாத் துவக்கி வைத்தார்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு நவ., 1ல் நடக்கிறது. அதுவரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், குறிப்பிட்ட பாடத்தொகுப்புகளின் அடிப்படையில் மாதிரித் தேர்வு நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விரும்புவோர், 93429 33429 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

வாசகர் வட்டத் தலைவர் மோகன்ராஜ், பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு, நுாலகர்கள் ராணி, ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us