ADDED : செப் 13, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி, செப். 14 –
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட, 26வது வார்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பையை, நான்கு விதத்தில் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற உறுப்பினர் சாந்தலிங்கம், தூய்மை பணியாளர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், ‘நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அனைத்து குடியிருப்பு மற்றும் வணிக நிறுவன பகுதியில் மக்கும், மக்காத, சுகாதாரம், வீட்டு அபாயகர கழிவு உள்ளிட்டவைகளை தனித்தனியாக பிரித்து ஒப்படைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இதை பொதுமக்கள் தரப்பில் முறையாக பின்பற்ற வேண்டும்’ என்றனர்.
