/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி
/
சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி
ADDED : அக் 07, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:2003ல் துவங்கப்பட்ட சீஷா தொண்டு நிறுவனம், இந்தியா முழுவதும் 22 ஆண்டுகளாக சமுதாயத்தில் பின்தங்கிய பலதரப்பட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், மறுவாழ்வு போன்றவை வாயிலாக, சேவை செய்து வருகிறது.
அவ்வகையில், சீஷா தொண்டு நிறுவனம் சார்பில், கோவை காருண்யா பல்கலை சிட்டி சென்டர் வளாகத்தில், இலவச தையல் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. தையல் பயிற்சியை, பல்கலை வேந்தர் மற்றும் சீஷா நிறுவனர் பால் தினகரன், காருண்யா பல்கலையின் துணை தலைவர் சாமுவேல் துவக்கி வைத்தனர். சமுதாயத்தில் நலிவுற்ற பெண்களுக்கு, இங்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு மூன்று மாதம் நடத்தப்பட உள்ளது.