/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீஅன்னபூர்ணா கிளை காங்கேயத்தில் திறப்பு
/
ஸ்ரீஅன்னபூர்ணா கிளை காங்கேயத்தில் திறப்பு
ADDED : அக் 07, 2025 01:15 AM

கோவை:ஸ்ரீ அன்னபூர்ணா நிறுவனத்தின், 21வது கிளை, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் திறக்கப்பட்டது. குமரன் ஆயில் மில்லை சேர்ந்த பொன்னுசாமி திறந்து வைத்தார்.
12,500 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிளையில், பிரத்யேக டைனிங் ஹால், ஒரு பார்ட்டி ஹால், இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவு மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. முதல் விற்பனையை, சண்முகம் தொடங்கி வைக்க, அரவிந்த் பெற்றுக்கொண்டார்.
முதல்தளத்தில் உள்ள ஆதிரை பார்ட்டி ஹாலை, காங்கேயத்தைச் சேர்ந்த டாக்டர் விஷ்ணு ஆனந்த் திறந்து வைத்தார். சமையலறையை யுனைடெட் கார்பன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயந்தன் திறந்து வைத்தார்.
பிரத்யேக இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவில், 100க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25க்கும் அதிகமான கார வகைப் பலகாரங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பேக்கரி உணவு வகைகளை வாங்கலாம்.
ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இணை நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், தலைமை செயல் அதிகாரி ஜெகன் தாமோதரசாமி மற்றும் எக்ஸ்கியூடிவ் இயக்குனர் விவேக் சீனிவாசன், கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.