/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
/
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி
ADDED : மே 09, 2025 06:57 AM
குடிமங்கலம்: குடிமங்கலம் ஒன்றியத்தில், 51 குளம், குட்டைகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளில் ஆழப்படுத்தி மழை நீரை சேமிக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையில், விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுத்துக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டு, மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 151 நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில், வேலுார் மேற்கு குளம், பொன்னேரி, தரைப்பள்ளம் குளம், தொட்டம்பட்டி ஏ.ஜி.எம்.டி., குளம், பூளவாடி மாப்பிள்ளை நாயக்கர் குளம், கெஞ்சிலு காட்டு குட்டை, மரிக்கந்தை, வேலசெட்டிபாளையம், கொண்டம்பட்டி கருப்புசாமி கோவில் குளம் ஆகியவற்றில் மண் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், கொங்கல் நகரம் சப்பநாயக்கர் குளம், விருகல்பட்டி பழையூர் குளம், வீதம்பட்டி மாரியம்மன் கோவில் குளம், கோழிக்குட்டை குளம், ஆமந்தகடவு பேர நாயக்கர் குளம், கொசவம்பாளையம், வக்கண்ணன் குட்டை, ஏ.டி., காலணி குட்டை, வாகத்தொழுவு சலவநாயக்கன்பட்டி குட்டை, ஆத்துக்கிணத்துப்பட்டி, பூளவாடி ரோட்டிலுள்ள மேற்கு பகுதி குட்டையில் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பண்ணைக்கிணறு, மாகாளியம்மன் கோவில் குட்டை, அணிக்கடவு பெருமாள் கோவில் குளம், நாகூர் குளம், கொங்கல்நகரம் மயான கரை குளம், குடிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கிழக்கு பகுதியிலுள்ள குளம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிழக்கு பகுதியிலுள்ள குளம், வேலப்பநாயக்கன் குளங்களில் மண் எடுக்கலாம்.
புக்குளம் கடை குளம், ஏ.ஜி.எம்.டி.,குளம், கவுண்டர் குளம், பூளவாடி மேட்டுப்பாளையம், பெரியபட்டி குளம், ரக்கம்பாளையம் குளம், ஆலாமரத்துக்குட்டை, வாகத்தொழுவு ஜக்கமநாயக்கன்பாளையம் குளம், கொள்ளுப்பாளையம் குளம், கொசவம்பாளையம் குளம், மொகவனுார் குளம், இலுப்பநகரம் குட்டை, ஆலாமரத்துார் குளம், கோட்டமங்கலம் உப்பிலி குட்டை, செட்டி குளம், முருங்கப்பட்டி குளத்திலும் எடுக்கலாம்.
புதுப்பாளையம் அடிவள்ளி குளம், சோமவாரபட்டி குளம், பொட்டயநாயக்கனுார் குளம், மூங்கில்தொழுவு குளம் மற்றும் உப்பாறு ஓடை அருகே உள்ள குளம், ஆமந்தகடவு தட்டான்தோட்டம் குளம் என, 51 குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள விவசாயிகள், https://tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக, ஆதார் எண், போட்டோ ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.