அரசு கல்லுாரி மாணவர்களுக்கு இலவச தொழில்நுட்ப பயிற்சி
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு இலவச தொழில்நுட்ப பயிற்சி
UPDATED : அக் 10, 2026 05:41 PM
ADDED : அக் 10, 2026 05:37 PM
கோவை: கோவை மண்டல அறிவியல் மையம் மற்றும் எம்.கே. பவுண்டேஷன்ஸ் சார்பில், அரசு கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஓ.டி., டிசைன் திங்கிங் மற்றும் தொழில்முனைவோர் திறன் குறித்த இலவச பயிலரங்கு நடத்தப்படுகிறது.
அவிநாசி ரோடு மண்டல அறிவியல் மைய வளாகத்தில் உள்ள ‘இன்னோவேஷன் ஹப்’ ல், அக். 24 முதல் 3 மாதங்களுக்கு இப்பயிற்சி நடக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை முழுநாள் வகுப்புகள் நடத்தப்படும்.
அரசு பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி மற்றும் அரசு பல்கலை மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம். முதலில் விண்ணப்பிக்கும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி.
விருப்பமுள்ளவர்கள், அக்., 16க்குள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கோவை மண்டல அறிவியல் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மண்டல அறிவியல் மைய ‘இன்னோவேஷன் ஹப்’ வழிகாட்டி லெனின் பாரதியை 85239 09178 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
