UPDATED : அக் 10, 2026 05:41 PM
ADDED : அக் 10, 2026 05:37 PM

அ நிறம் | அளவு
கோவை: ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இந்திய அவசர மருத்துவச் சங்கம் சார்பில் இதய அவசர சிகிச்சை பயிலரங்கம், தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நடந்தது.
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். இதய நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் நிலையை விரைவாகக் கண்டறிந்து, அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் திறனை மேம்படுத்தவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்திய அவசர மருத்துவச் சங்கத் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன், தலைமைச் செயல்பாட்டு அலுவலர் டாக்டர் மணிசெந்தில்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
