/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
/
போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி; மாநகராட்சி சார்பில் துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 01:21 AM

கோவை; கோவை மாநகராட்சி சார்பில் டி.என்.பி.எஸ்.சி.,போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வகர்களுக்காக, இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில், குரூப்-2 மற்றும் குரூப்-4 போட்டித்தேர்வுக்கான வகுப்புகள், காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளன.
மாணவர்கள், தேர்வுக்கு தேவையான கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் முதற்கட்ட பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் பி.எஸ்.ஜி., ஐ.டெக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள், மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு, வழிகாட்டுதல்களையும் வழங்கவுள்ளனர்.
கோவை கலெக்டர் பேசுகையில், “அறிவுசார் மையத்தை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. அதில் ஒரு பகுதியாக இப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராகுவோருக்கு, நிச்சயம் இந்த வகுப்புகள் பயனுள்ளதாக அமையும்,” என்றார்.
இலவச வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், 63858 37858 என்ற எண்ணில் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மாநகராட்சியின் வாயிலாக, நீட் தேர்வுக்கான பயிற்சி, எவ்வாறு மாணவர்களுக்கு பயனளித்ததோ, அதைப் போலவே டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான பயிற்சியும், பெரும் உதவியாக அமையும். மாணவர்கள் இந்த வாய்ப்பை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
-சிவகுரு பிரபாகரன்
மாநகராட்சி கமிஷனர்