/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களுக்கு சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி
/
பெண்களுக்கு சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி
ADDED : ஆக 31, 2025 08:28 PM
மேட்டுப்பாளையம்; மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சிகான சணல் பை தயாரித்தல், குறித்து ஒரு மாத கால பயிற்சி மேட்டுப்பாளையம் சி.டி.சி., பஸ் நிறுத்தம் அருகே உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வழங்க உள்ளனர்.
இந்த பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9976180670, 9442775263 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.---