/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்லபிராணிகளுக்கு இன்று இலவச தடுப்பூசி
/
செல்லபிராணிகளுக்கு இன்று இலவச தடுப்பூசி
ADDED : செப் 28, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை அரசு கால்நடை பன்முக மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை டவுன் ஹால் இஸ்மாயில், 1வது வீதியில் கால்நடை பன்முக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் நாளை (இன்று), உலக வெறிநோய் தினம் அனுசரிக்கும் வகையில் காலை 9:00 மணியளவில், செல்லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதனை, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.