/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
180 பேருக்கு இலவச தொழில் திறன் பயிற்சி
/
180 பேருக்கு இலவச தொழில் திறன் பயிற்சி
ADDED : செப் 17, 2025 09:52 PM
அன்னுார்; அன்னுாரில் 180 பேருக்கு, இலவச தொழில் திறன் பயிற்சி வழங்கப் பட்டது.
அன்னுார், சிறுமுகை, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், 180 பேருக்கு, சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ், சாரதா ஸ்கில் அகாடமி சார்பில், இலவசமாக தையல், எம்பிராய்டரி, மசாலா தூள் தயாரித்தல், பிளம்பிங், எலக்ட்ரிகல், ஏசி பயிற்சி 40 நாட்கள் வழங்கப்பட்டது.
பயிற்சி முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் 180 பேருக்கு, அன்னுார் காட்டன் மில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிறுவன சேர்மன் கண்ணப்பன் சான்றிதழ்களை பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கினார். இயக்குனர்கள் போத்தி ராஜ், கிருத்திகா, சஞ்சனா, தலைமை நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் ராஜ்குமார், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்றோர் பங்கேற்றனர்.
பயிற்சி பெற்றவர்கள், வங்கி கடன் பெற்று சுயதொழில் துவங்க அறிவுரை வழங்கப்பட்டது.