/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீட்டு அட்டை வாயிலாக இலவசம்! ஜி.எச்.,ல் சி.டி., ஸ்கேன் பரிசோதனை
/
மருத்துவ காப்பீட்டு அட்டை வாயிலாக இலவசம்! ஜி.எச்.,ல் சி.டி., ஸ்கேன் பரிசோதனை
மருத்துவ காப்பீட்டு அட்டை வாயிலாக இலவசம்! ஜி.எச்.,ல் சி.டி., ஸ்கேன் பரிசோதனை
மருத்துவ காப்பீட்டு அட்டை வாயிலாக இலவசம்! ஜி.எச்.,ல் சி.டி., ஸ்கேன் பரிசோதனை
ADDED : ஜூலை 06, 2024 02:11 AM

பொள்ளாச்சி:'தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் வாயிலாக, இலவசமாக சி.டி., ஸ்கேன் செய்யப்பட உள்ளது,' என, நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில், பொள்ளச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நோயாளிகள் நலச்சங்க கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சரவண பிரகாஷ் வரவேற்றார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, ஆண்டறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் நோயாளி நலச் சங்க உறுப்பினர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், பங்கேற்றனர்.
கூட்டத்தில், நோயாளி நலச்சங்கத்திற்கு சேவை நிறுவனங்களிலிருந்து வைப்புத் தொகை திரட்ட முடிவு செய்யப்பட்டது. சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் பேசுகையில், 'மருத்துவமனையின் நுழைவுவாயிலில் வேகத்தடை அமைக்க வேண்டும். மருத்துவமனைக்கு வெளியே நுழைவுவாயில் அருகில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பையை, நகராட்சி நிர்வாகம் வாயிலாக தினமும் அகற்ற வேண்டும். நகராட்சி துாய்மை பணியாளர்கள் வாயிலாக, மருத்துவமனை வளாகம் மாதம் ஒரு முறை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்,' என்றனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் பேசியதாவது:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், இதுவரை மருத்துவ கழகத்தின் வாயிலாக, 500 ரூபாய்க்கு சி.டி., ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது.இனி தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் வாயிலாக மருத்துவ காப்பீட்டு அட்டையை பயன்படுத்தி இலவசமாக சி.டி., ஸ்கேன் செய்யப்பட உள்ளது.
அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும், தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை வாயிலாக இலவசமாக செவித்திறன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
புதியதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டண வார்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 'ஜப்பான் ஜெய்கா' அமைப்பு வாயிலாக, 39 கோடி ரூபாய்க்கு புதிய கட்டடம் மருத்துவமனைக்கு கிடைக்க உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.