தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இலவச யோகா பயிற்சி வரும் 28ல் துவக்கம்

இலவச யோகா பயிற்சி வரும் 28ல் துவக்கம்

இலவச யோகா பயிற்சி வரும் 28ல் துவக்கம்


ADDED : பிப் 25, 2024 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2024 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்;அன்னுாரில் இலவச யோகா பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி துவங்குகிறது.

ஹார்ட் புல்னஸ் அமைப்பு, 75 ஆண்டுகளாக, 100 நாடுகளுக்கு மேலாக தியானம் கற்பித்து வருகிறது. இதன் சார்பில், அன்னுாரில் 'யோக மகோத்சவம்' என்னும் நிகழ்ச்சி வருகிற 28ம் தேதி துவங்குகிறது. அனைத்து இல்லங்களுக்கும் தியானத்தை கொண்டு செல்வோம் என்னும் நோக்கத்துடன் ஹார்ட்புல்னஸ் அமைப்பும் மத்திய அரசின் கலாசார அமைச்சகமும், இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அன்னுார் மெயின் ரோட்டில், சண்முகா ஜுவல்லரி மாடியில், மூன்று நாள் பயிற்சி நடக்கிறது. பிப். 28, 29, மார்ச் 1 ஆகிய மூன்று நாட்களும் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை பயிற்சி நடக்கிறது.

எந்த கட்டணமும் இல்லை. இதில் மூச்சு பயிற்சி, யோகாசனம், தியானம், முத்திரை ஆகியவை கற்பிக்கப்படுகிறது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம், பதட்டத்தில் இருந்து விடுபடலாம். ஆழ்ந்த தூக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் விவரங்களுக்கு 97871 36265 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us