/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுதந்திர போராட்ட வீரர் நினைவு நாள் அனுசரிப்பு
/
சுதந்திர போராட்ட வீரர் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : ஆக 20, 2025 09:28 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு, தெற்கு நகர தி.மு.க. சார்பில், சுதந்திர போராட்ட வீரர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகர வடக்கு தி.மு.க. சார்பில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின், 254வது நினைவு நாளையொட்டி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடந்தது. வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர அவை தலைவர் அழகப்பன், நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன், துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நடந்தது.தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். மாவட்ட சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் செல்வராஜ், ஒண்டிவீரன் திருவுருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நகராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சதீஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திக்கேயன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாட்டினை கவுன்சிலர் நாச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் செய்திருந்தனர்.