/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை 47 ரூபாயாக நிர்ணயம்
/
இளநீர் பண்ணை விலை 47 ரூபாயாக நிர்ணயம்
ADDED : ஜூலை 13, 2025 08:55 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த வார விலையே நீடிக்கிறது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 19,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இளநீர் அறுவடை சுறு,சுறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கர்நாடகா மாநில சந்தைகளில் இருந்து இளநீர் வரத்து குறைந்து காணப்படுவதால், பொள்ளாச்சி பகுதி இளநீருக்கு நல்ல தேவை உள்ளது.
தேங்காய், கொப்பரை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இளநீரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.