/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.50க்காக நண்பர் கொலை; 'போதை' நண்பருக்கு சிறை
/
ரூ.50க்காக நண்பர் கொலை; 'போதை' நண்பருக்கு சிறை
ADDED : மே 31, 2025 04:57 AM

கோவை; காந்திபுரத்தில் கட்டட தொழிலாளி செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மதுரையை சேர்ந்தவர் தினேஷ், 32; இவர் கோவையில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தார். கடந்த 12ம் தேதி, தனது நண்பர்கள் சரவணன் மற்றும் ஸ்டீபன் ஆகியோருடன், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மது குடித்தார். அங்கிருந்து ஜி.பி., சிக்னல் பகுதிக்கு சென்றனர். அப்போது, சரவணன் பாக்கெட்டில் இருந்த ரூ. 50 பணத்தை தினேஷ் எடுத்தார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த சரவணன், தினேைஷ கீழே தள்ளி, தலையில் செங்கலை போட்டு கொலை செய்தார்.
மறுநாள் தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டீபனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சரவணன் கொலை செய்ததாக தெரிவித்தார்.
தலைமறைவான சரவணனை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணனை தேடி வந்த நிலையில், அவர் கரும்புக்கடை பகுதியில் இருப்பது தெரிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.