/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் பிடிக்கும் போது பிரெண்ட்ஷிப்; மொபைல், பைக்குடன் 'எஸ்கேப்'
/
மீன் பிடிக்கும் போது பிரெண்ட்ஷிப்; மொபைல், பைக்குடன் 'எஸ்கேப்'
மீன் பிடிக்கும் போது பிரெண்ட்ஷிப்; மொபைல், பைக்குடன் 'எஸ்கேப்'
மீன் பிடிக்கும் போது பிரெண்ட்ஷிப்; மொபைல், பைக்குடன் 'எஸ்கேப்'
ADDED : ஜூன் 25, 2025 11:11 PM
கோவை; வாலாங்குளத்தில் மீன் பிடித்து கொண்டு இருந்த நபரிடம் பழகி, பைக், மொபைல் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உக்கடம், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நவீன் குமார், 48; வாலாங்குளத்தில் மீன் பிடித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 19ம் தேதி நவீன்குமார், வாலாங்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நவீன்குமாரிடம், தனது பெயர் அப்துல் ரஹீம்; துாத்துக்குடியில் இருந்து வந்து உக்கடம், வின்சென்ட் ரோட்டில் தங்கிருந்து மீன் வியாபாரம் செய்து வருவதாக கூறி அறிமுகம் ஆனார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த நான்கு நாட்களாக இருவரும் சேர்ந்து மீன் பிடித்து வந்தனர்.
இருவரும் சேர்ந்து மது குடிக்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இருவரும் மது குடிக்க, நவீன் குமாரின் இருசக்கர வாகனத்தில், சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர்.
அப்போது, நவீன்குமார் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது மொபைலை அப்துல் ரஹீமிடம் கொடுத்து விட்டு, மது வாங்க சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது, அப்துல் ரஹீம் மாயமாகியிருந்தார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹீமை கைது செய்தனர். பின்னர் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.