/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி வாரம் இரு முறை ரெய்டு புகையிலை ஒழிப்பில் தீவிர நடவடிக்கை
/
இனி வாரம் இரு முறை ரெய்டு புகையிலை ஒழிப்பில் தீவிர நடவடிக்கை
இனி வாரம் இரு முறை ரெய்டு புகையிலை ஒழிப்பில் தீவிர நடவடிக்கை
இனி வாரம் இரு முறை ரெய்டு புகையிலை ஒழிப்பில் தீவிர நடவடிக்கை
ADDED : அக் 26, 2025 02:53 AM
கோவை: மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு துறை சார்பில், வாரம் ஒரு முறை என்றிருந்த ரெய்டு செயல்பாடுகள் இனி, வாரம் இரு முறையாக மாற்றப்பட்டுள்ளது. பொது இடத்தில் புகைப்பிடித்தாலும் உடனடி அபராதம் விதிக்கப்படும்.
தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், 60 நாட்கள் புகையிலை இல்லா இளைஞர் பிரசாரம் 3.0 விழிப்புணர்வு முகாம், கோவையில் கடந்த 9ம் தேதி துவங்கியது.
கல்லுாரி, பள்ளி மாணவர்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் டாக்டர் சரண்யா கூறியதாவது:
கடந்த, 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை, 279 இடங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், பிற குறைபாடுகளுக்காக சுகாதார நிலையங்களுக்கு வருபவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு, ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று ரெய்டு நடந்தது. இனி, வாரத்தில் இரண்டு நாள் ரெய்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு, உணவு பாதுகாப்புத்துறை, போலீஸ், உள்ளூர் பொறுப்பாளர்கள் இணைந்து, பெரியளவில் ரெய்டு நடத்தப்படும்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள், பள்ளிகள் அருகில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பவர்கள் மீது, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது, போலீஸ் தரப்பில் 'குண்டாஸ்' போடப்படுகிறது.
9ம் தேதி முதல் 22ம் தேதி வரை, ரெய்டு மேற்கொண்டு குண்டாஸ் தவிர்த்த இரண்டு பிரிவுகளில், 150 விதிமீறல்கள் மீது, நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தொடர் புகையிலை பழக்கம் கொண்டவர்கள், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தங்கள் மரபணு வாயிலாக, பாதிப்பை கடத்துகின்றனர் என்பதை மறக்கக்கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

