நோய் பாதிப்பால் விரக்தி; வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி
நோய் பாதிப்பால் விரக்தி; வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி
ADDED : ஏப் 18, 2025 06:30 AM

அன்னுார் ; நோய் பாதிப்பால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டுக்கு கட்டட தொழிலாளி தீ வைத்ததில் பொருட்கள் எரிந்து கருகின.
சாணாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 48. கட்டடத் தொழிலாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், முருகனுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கதிரியக்க சிகிச்சை மிகவும் வேதனை தருவதாக கூறி இரண்டு மாதங்களாக சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் பகலில் மனைவி, மகன்கள் வீட்டில் இல்லாதபோது, முருகன் தனது வீட்டுக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வீட்டிலிருந்த உடைகள், சமையல் சாதனங்கள், பீரோ, கட்டில் மற்றும் சான்றிதழ்கள் என அனைத்தும் எரிந்து கருகின.
இதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டுக்குள்ளிருந்து அனைத்து பொருட்களும் எரிந்து விட்டன. அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
