ADDED : அக் 17, 2024 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில், புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பாக நடந்தது.
வால்பாறை வாழைத்தோட்டம் காமாட்சி அம்மன் கோவிலில், புரட்டாசி மாத பவுர்ணமி நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, மதியம், 12:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல், வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், சிறுவர்பூங்கா பராசக்தி அம்மன் கோவில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது.