/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
/
பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
ADDED : செப் 07, 2025 09:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னுார் ஓதிமலை சாலையில் உள்ள பெரிய அம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை பெரியம்மனுக்கு அபிஷேக பூஜையும் அலங்கார பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், சின்னம்மன் கோவில், மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதி, பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், கதவுகரை பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.