/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடுகன்காளிபாளையத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு
/
வடுகன்காளிபாளையத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு
வடுகன்காளிபாளையத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு
வடுகன்காளிபாளையத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு
ADDED : பிப் 09, 2026 06:50 AM
கருமத்தம்பட்டி: வடுகன்காளிபாளையத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட, 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டாம்பாளையம் ஊராட்சி வடுகன்காளிபாளையம் அரசு பள்ளியில் வகுப்பறைகள் கட்ட, 38 லட்சம் ரூபாயும், கிட்டாம் பாளையம் ஊராட்சி வினோபா நகரில் கான்கிரீட் நடைபாதைகள் அமைக்க, 1 லட்சத்து, 83 ஆயிரம் ரூபாயும், வடுக பாளையம் மயானம் அருகே வடிகால் மற்றும் உறிஞ்சு குழாய் அமைக்க 4 லட்சத்து, 14 ஆயிரமும், ஏ.டி. காலனியில் நிலத்தடி தொட்டி மற்றும் வடிகால் அமைக்க, 4 லட்சத்து, 98 ஆயிரமும், கான்கிரீட் ரோடு அமைக்க, 2 லட்சத்து, ஆறாயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல், பட்டணம் ஊராட்சியில், வகுப்பறைகள் அமைக்க, 20 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயும், அரசூர் ஊராட்சி செங்கோடகவுண்டன் புதூரில், தங்க நாயகி அம்மன் கோவில் வரை கான்கிரீட் ரோடு அமைக்க, 21 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளை கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் துவக்கி வைத்தார்.

