/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வேடிக்கை! மத்திய, மாநில அரசுகள் மீது எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
/
விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வேடிக்கை! மத்திய, மாநில அரசுகள் மீது எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வேடிக்கை! மத்திய, மாநில அரசுகள் மீது எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணாமல் வேடிக்கை! மத்திய, மாநில அரசுகள் மீது எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
ADDED : பிப் 19, 2025 09:21 PM

பொள்ளாச்சி; ''தென்னை விவசாயிகளின் வேதனை, பிரச்னைக்கு தீர்வு காணாமல், மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் நடக்கும் வளர்ச்சிப்பணிகளை துவக்கி வைத்த, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம், பாலியல் புகலிடமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும், தினந்தோறும் கூட்டு பாலியல் சம்பவங்கள், விவகாரமான பாலியல் சம்பவங்கள் நடக்கிறது. கோவையில் சிறுமியை, ஏழு கல்லுாரி மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே சிறுமியிடம் நான்கு சிறுவர்கள் தவறாக நடந்து கொண்டுள்ளனர். என தினமும் வக்கிரமான சம்பவங்கள் நடக்கின்றன.
இச்சூழலில், தமிழக முதல்வர், தன்னை அனைவரும், அப்பா, அப்பா என அழைப்பதாக கூறுவது வேதனை அளிக்கிறது. அனைவரும், 'அப்பா காப்பாத்துங்க' என்ற நோக்கில் அழைக்கின்றனரா என புரியவில்லை.
தென்னையில், கேரளா வாடல், தஞ்சாவூர் வாடல் என பல நோய்கள் தாக்கப்பட்டு, மரங்கள் அடியோடு வெட்டும் சூழல் உள்ளது.தற்போது வெள்ளை ஈ விஸ்வரூபமெடுத்துள்ளது. தேங்காய்க்கு விலை இருந்தாலும், காய்ப்புத்திறன் இல்லாததால், விவசாயிகள் பலன் பெற முடியவில்லை. தமிழகம் முழுவதும் தென்னை மரங்கள் காய்ப்புத்திறன் இழந்து வாடுவதை காண முடிகிறது.
இதுவரை, மத்திய, மாநில அரசுகள், தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் மருந்து கண்டறியவில்லை; அதற்கான முயற்சி எடுத்தனரா என்றும் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், இன்னும், 10 ஆண்டுகளில், தென்னை விவசாயம், காட்சிப்பொருளாக மாறிவிடும்.
தென்னை விவசாயம் தமிழகத்தில், 15 மாவட்டங்களின் உயிர் நாடியாக உள்ளது என்பதை அரசுகள் உணர வேண்டும்.
வேளாண் பல்கலை மற்றும் விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளும், விவசாயிகளின் வேதனையை தீர்க்காமல் வேடிக்கை பார்க்கின்றன.
பொள்ளாச்சியில் ஆய்வு செய்த அதிகாரிகளும், தோட்டத்துக்கு செல்லாமல் தார் ரோட்டில் நின்று பார்த்து சென்றுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

