/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி துவங்கியது
/
பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி துவங்கியது
ADDED : மே 01, 2025 11:55 PM

கோவை; 'பிராம்ட் டிரேடு' நிறுவனம் சார்பில், கோவை 'கொடிசியா' வளாகத்தில் நான்கு நாட்கள் நடக்கும் பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி நேற்று துவங்கியது; 4ம் தேதி நிறைவு பெறுகிறது.
இக்கண்காட்சியில், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், ஆடைகள், கிச்சன் பொருட்கள் உட்பட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபறும் இக்கண்காட்சியில், பார்வையாளர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
தயாரிப்பாளர்கள் நேரடியாக பங்கேற்பதால், பாதி விலையில் பர்னிச்சர்களை வாங்கிச் செல்லலாம். ஏ.சி., வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. லேப்டாப், மொபைல் வாங்குபவர்களுக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. ஸ்லோகன் போட்டியில் பங்கேற்பதன் வாயிலாக, ஒரு சவரன் தங்க நாணயம் பரிசாக பெறும் வாய்ப்புள்ளது என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

