/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
/
பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
ADDED : ஆக 09, 2024 10:32 PM

கோவை;கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், 'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ்' நிறுவனம் சார்பில் பர்னிச்சர், பேஷன் பொருட்கள், பலவித இன்டீரியர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இக்கண்காட்சி, 12ம் தேதி நிறைவு பெறுகிறது.
இங்கு, 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்தர வெளிநாட்டு பர்னிச்சர், பராம்பரிய பர்னிச்சர் வாங்கலாம். 15க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் 900க்கும் மேற்பட்ட மாடல்களில் அனைத்து பர்னிச்சரும், தொழிற்சாலைகளில் இருந்து வரவழைத்து பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி விலைக்கு கிடைக்கிறது.
பழைய பர்னிச்சர் எக்ஸ்சேஞ்சும் உண்டு. அனைத்து பர்னிச்சருக்கும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை உத்திரவாதம் தரப்படுகிறது. முன்பணம் இன்றி, எளிய தவணை முறையில் பர்னிச்சர் வாங்கிச்செல்லலாம். ஜீரோ சதவீத வட்டியில், கடனுதவியுடன் இ.எம்.ஐ., வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை பார்வையிடலாம்.