/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.ராமசாமி நாயுடு பள்ளி அபாரம்
/
ஜி.ராமசாமி நாயுடு பள்ளி அபாரம்
ADDED : ஆக 25, 2025 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில், கிழக்கு குறுமைய விளையாட்டு போட்டி, தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியில் நடந்தது.
பால் பேட்மிண்டன் போட்டியில் ஜி.ராமசாமி நாயுடு பள்ளி மாணவர்கள் அணிகள், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் முதலிடம் பெற்றன. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான த்ரோபால் போட்டியில், இரண்டாமிடம் பிடித்தது.
அதேபோல், மாணவியர் அணிகள், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை பிடித்தன. தவிர, 19 வயதுக்கு உட்டோர் பிரிவில் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வெற்றி பெற்ற அணியினரை ஆசிரியர்கள் பாராட்டினர்.