/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் கேலோ இந்தியா பெண்கள் சைக்கிளிங் லீக்
/
கோவையில் கேலோ இந்தியா பெண்கள் சைக்கிளிங் லீக்
ADDED : ஜன 30, 2024 12:04 AM
கோவை;தேசிய அளவிலான கேலோ இந்தியா பெண்கள் சைக்கிளிங் லீக் போட்டிகள் பிப்., 3, 4 தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது.
மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு அஸ்மிதா லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் படி, பெண்களுக்கான தென் மண்டல டிராக் மற்றும் ரோடு சைக்கிளிங் போட்டிகளை, தமிழகத்தில் நடத்த இந்திய சைக்கிளிங் சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் படி, பிப்., 3, 4 ஆகிய தேதிகளில், அரசூர் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் போட்டி நடத்தப்படுகிறது. இதில், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீராங்கனைகள், 98947 89893, 99763 77722 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.