ADDED : பிப் 19, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குளத்துப்பாளையம், இ.பி.ஆபீஸ் காலனியில் உள்ள வீட்டில், சட்டவிரோதமாக, பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உறுதி செய்தனர்.
தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அங்கனசாமி, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், சேகர், செல்வம், ஆனந்த குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். சீட்டு கட்டுகள், 2,020 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
