தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சி.பி.எஸ்.இ தேர்வில் கேம்போர்டு பள்ளி மாணவர்கள் அசத்தல்

சி.பி.எஸ்.இ தேர்வில் கேம்போர்டு பள்ளி மாணவர்கள் அசத்தல்

சி.பி.எஸ்.இ தேர்வில் கேம்போர்டு பள்ளி மாணவர்கள் அசத்தல்


ADDED : ஏப் 16, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தி கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 92 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

500 மதிப்பெண்களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்று பிரஜேஷ் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். 484 மதிப்பெண்களுடன் மெர்சில்லா பெலிக்ஸ் இரண்டாம் இடமும், 479 மதிப்பெண்களுடன் மிர்நேந்ரா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

பாட வாரியாக, கணிதத்தில் 95 மதிப்பெண்கள் பெற்று மெர்சில்லா பெலிக்ஸ், ஹர்சில் போஹ்ரா, கிரிஷாய் கார்த்திக், பிரஜேஷ், மிர்நேந்ரா ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களுடன் தியாகராஜன், மெர்சில்லா பெலிக்ஸ் ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பிரஜேஷ் சென்டம் எடுத்துள்ளார். அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்களுடன் பிரஜேஷ், சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களுடன் மெர்சில்லா பெலிக்ஸ், பிரெஞ்சில் 96 மதிப்பெண்களுடன் ஆதித் கிருஷ்ணன், இந்தியில் 96 மதிப்பெண்களுடன் குஷி பரத்வாஜ் ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கொடி அருள் ரமேஷ் ஆகியோர் பாராட்டி, மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us