/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து போட்டியில் வெற்றி குவித்த கேம்போர்டு
/
கால்பந்து போட்டியில் வெற்றி குவித்த கேம்போர்டு
ADDED : அக் 21, 2025 11:34 PM

கோவை: கேம்போர்டு சர்வதேசப் பள்ளி, மாவட்ட அளவிலான 'கேம்போர்டு கோல்டன் பூட் சாம்பியன்ஷிப் 2025' கால்பந்து போட்டியை நடத்தியது. பள்ளிகளுக்கிடையே, 14 வயதுக்குட்பட்ட, மாணவர்கள் மற்றும் மாணவிகள் பிரிவுகளில், போட்டிகள் இடம்பெற்றன.
மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், தி கேம்போர்டு சர்வதேச பள்ளி முதலிடத்தையும், அனன் சர்வதேச பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்து வென்றன.
மாணவிகளுக்கான போட்டியில், தி கேம்போர்டு சர்வதேச பள்ளி முதலிடத்தையும், சின்மயா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி இண்டாம் இடத்தையும் பெற்று வென்றன.
மாணவிகள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக, தி கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவி தனிஷ்கா சுதிரும், சிறந்த கோல் கீப்பராக தி கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவி அக்சராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்கள் பிரிவில், சிறந்த தடுப்பு ஆட்ட வீரராக, தி கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவர் சாத்விக் தேர்வானார். வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு, தி கேம்போர்டு சர்வதேச பள்ளி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை ஆகியோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.