/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினபுரி பள்ளியில் நாடகத்தால் பாடம்
/
ரத்தினபுரி பள்ளியில் நாடகத்தால் பாடம்
ADDED : அக் 21, 2025 11:34 PM

கோவை: ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், நாடகத்தின் வழியாக மாணவர்களுக்கு புதுமையான கற்றல் அனுபவத்தை வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில், தீபாவளி போன்ற பண்டிகைகள் எதற்காக கொண்டாடப்படுகின்றன என்பதை மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.
அப்பள்ளி ஆசிரியை லிட்வின் அமலியா கூறுகையில், ''பண்டிகைகள் எதனால், எதற்காகக் கொண்டாடப்படுகின்றன போன்ற விவரங்களை, மாணவர்களுக்கு நாடகத்தின் மூலம் கற்றுக்கொடுக்க எண்ணினோம். இந்த முயற்சிக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்களும் உற்றுக் கவனித்தனர்.
ஒரு தகவலை, மாணவர்களுக்கு நாம் எந்த முறையில் கொண்டு சேர்க்கிறோம் என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. அந்த வகையில், நாடகம் ஒரு சிறந்த முயற்சி,'' என்றார்.