ADDED : நவ 01, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; சாலையூர், பழனியாண்டவர் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது. இன்று காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனமும், இதையடுத்து காப்பு கட்டுதல், வேள்வி பூஜை, சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு மூலமந்திர அர்ச்சனையுடன் வழிபாடு நடக்கிறது.
வரும் 3ம் தேதி காலை 7:00 மணி, 11:00 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு வேள்வி பூஜையும், மூல மந்திர வழிபாடும் நடக்கிறது. வரும் 6ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் இரவு பழனி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
வரும் 7ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு வழிபாடும், மதியம் 2:30 மணிக்கு சண்முக அர்ச்சனையும், இரவு 7:00 மணிக்கு தெய்வானை தவசி காட்சியும் நடக்கிறது.

