/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கந்தர் சஷ்டி வழிபாட்டு குழு பழநி பாதயாத்திரை வழிபாடு
/
கந்தர் சஷ்டி வழிபாட்டு குழு பழநி பாதயாத்திரை வழிபாடு
கந்தர் சஷ்டி வழிபாட்டு குழு பழநி பாதயாத்திரை வழிபாடு
கந்தர் சஷ்டி வழிபாட்டு குழு பழநி பாதயாத்திரை வழிபாடு
ADDED : பிப் 03, 2025 11:22 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு கந்தர் சஷ்டி வழிபாட்டு குழு சார்பில், பழநி பாதயாத்திரை வழிபாடுகள் நடக்கிறது.
கிணத்துக்கடவு, கந்தர் சஷ்டி வழிபாட்டு குழு சார்பில், 45ம் ஆண்டு பழநி பாதயாத்திரை வழிபாட்டில், கடந்த மாதம் 6ம் தேதி, ஈச்சனாரி விநாயகர் கோவிலில் வருடாந்திர கணபதி ஹோமம், கோ பூஜை, சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார வழிபாடு, பஜனை மற்றும் விநாயகர் அகவல் கூட்டு வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
கடந்த, 2ம் தேதி, சிவலோக நாயகி அம்மன் உடனமர் சிவலோகநாதர் கோவில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை வழிபாடுகள் நடந்தது.
நேற்று, 3ம் தேதி, கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில், தை மாத சஷ்டி பூஜை நடந்தது. இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் சஷ்டி கவசம் கூட்டு பாராயணம் செய்யப்பட்டது.
வரும், 7ம் தேதி, கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில், காவடி மற்றும் வேல் பூஜை முடித்து சேவல் படை, சேவற்கொடி, ஆறுமுக காவடி போன்றவைகளை கிரிவலம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி, காலை 5:00 மணிக்கு, கோவிலில் இறை வழிபாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து காலை 6:00 மணிக்கு, கரிய காளியம்மன் கோவிலில் இறை வழிபாடு முடித்து, பழநி பாதயாத்திரை துவங்குகிறது.

