/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தி நினைவு நாள் போஸ்டர்: ஜனாதிபதிக்கு சிவசேனா புகார்
/
காந்தி நினைவு நாள் போஸ்டர்: ஜனாதிபதிக்கு சிவசேனா புகார்
காந்தி நினைவு நாள் போஸ்டர்: ஜனாதிபதிக்கு சிவசேனா புகார்
காந்தி நினைவு நாள் போஸ்டர்: ஜனாதிபதிக்கு சிவசேனா புகார்
ADDED : ஜன 31, 2024 02:15 AM

திருப்பூர்:காந்தி நினைவு நாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்து ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழக சிவசேனா இளைஞர் அணி தலைவர் திருமுருக தினேஷ், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சென்னை ஐகோர்ட் நீதிபதி, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோருக்கு அனுப்பிய கடித விவரம்:மகாத்மா காந்தி நினைவு நாள் குறித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 'தெறிக்கப்பட்ட ரத்தம்' போட்டோவுடன், மத வெறிக்கு மகாத்மா பலியான ஜன.,30 என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்பும் விதமாக இது உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, இது போன்ற செயல்கள் தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
போஸ்டர் சர்ச்சை குறித்து, திருமுருக தினேஷ் கூறியதாவது:
திருப்பூர் பகுதியில் இது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி மற்றும் வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள இடங்களில் இதை அதிகளவில் ஒட்டியும், அதனை போட்டோ எடுத்து கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும் எனவும் தி.மு.க., நிர்வாகிகள் கட்சியினருக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளனர்.
காந்தி இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அதை அரசியல் செய்தும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற செயல்களால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி அரசியல் லாப நோக்கிலும், ஆளும் கட்சியினர் கூட்டணி பெயரில் இவ்வாறு செய்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.