/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் பார்க்கிங் பகுதியாக மாறிய காந்திபுரம் மேம்பாலம்
/
கார் பார்க்கிங் பகுதியாக மாறிய காந்திபுரம் மேம்பாலம்
கார் பார்க்கிங் பகுதியாக மாறிய காந்திபுரம் மேம்பாலம்
கார் பார்க்கிங் பகுதியாக மாறிய காந்திபுரம் மேம்பாலம்
ADDED : டிச 22, 2025 06:00 AM

கோவை: பல கோடி ரூபாய் செலவிடப்பட்டும் முறையான பார்க்கிங் வசதி செய்யப்படாததால், செம்மொழி பூங்காவுக்கு வந்த வாகனங்கள், காந்திபுரம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டன.
கோவை காந்திபுரம் பகுதியில் சிறை மைதானத்தின் ஒரு பகுதியில், 45 ஏக்கரில் ரூ.208.50 கோடி செலவில், செம்மொழி பூங்கா கட்டப்பட்டது. இங்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வார இறுதி நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்குள் ஒரு வழியாகி விடுகின்றனர். ஏனெனில், ரூ.208 கோடி செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட செம்மொழி பூங்காவில், பார்க்கிங் வசதி கிடையாது.
காந்திபுரம் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் கார்கள் பார்க் செய்யப்பட்டன. இதனால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
வ.உ.சி., மைதானம், நேரு ஸ்டேடியம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினால் பாலத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் பிரச்னை தீரும்.

