/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 07, 2025 11:03 PM

வால்பாறை; வால்பாறையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில், 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை, இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விழா சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், கோவை கோட்ட செயலாளர் பாலசந்திரன், விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து பேசினார்.
வால்பாறையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 27ம் தேதி, 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. தொடர்ந்து நான்கு நாட்கள் பூஜைக்கு பின், 31ம் தேதி பகல், 12:00 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும்.
முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக சென்று மாலை, 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.