/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம்
ADDED : ஆக 24, 2025 11:40 PM
வால்பாறை; விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் நடந்தது.
வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வால்பாறை நகர தலைவர் சதீஷ், பொதுசெயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய தலைவர் ரவீந்தரகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில், வரும் 27ம் தேதி, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
ஐந்து நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின் வரும், 31ம் தேதி காலை கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, நகரில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று, மாலை நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும்.
ஊர்வலத்தில் குறிப்பிட்டநேரத்தில் எஸ்டேட் பகுதியிலிருந்து, சிலைகள் கொண்டுவர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.