/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சிலை விசர்ஜன விழா; அண்ணாமலை பங்கேற்பு
/
விநாயகர் சிலை விசர்ஜன விழா; அண்ணாமலை பங்கேற்பு
ADDED : ஆக 20, 2025 12:35 AM
மேட்டுப்பாளையம்; விநாயகர் சதுர்த்தி விழாவை அடுத்து நடைபெறும், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வல விழாவில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணியினர், விநாயகர் சதுர்த்தி விழாவை, மூன்று நாட்கள் கொண்டாட முடிவு செய்துள்ளனர். வருகிற, 27ம்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரில், 76 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்ய உள்ளனர். முதல் நாள் அன்னையர் தினம் விழா கொண்டாடுவது. அன்று பெண்களுக்கு கோல போட்டிகளும், விளக்கு பூஜைகள் நடத்துவது. இரண்டாம் நாள் (28ம் தேதி) இளைஞர் தினம் விழாவில், இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்துவது. மூன்றாவது நாள், (29ம் தேதி) விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம், காரமடை சாலை சி.டி.சி., டிப்போ முன்பு இருந்து துவங்கி, ஊட்டி சாலை வழியாக சுப்ரமணியர் கோவிலை அடைய உள்ளது. அங்கு, பவானி ஆற்றில் சிலைகளை கரைப்பது.
இந்த விசர்ஜன ஊர்வல விழாவில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து முன்னணி நிர்வாகம் செய்து வருகிறது என, ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.