/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெட்டல் டிடெக்டருடன் நடந்த விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்வு
/
மெட்டல் டிடெக்டருடன் நடந்த விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்வு
மெட்டல் டிடெக்டருடன் நடந்த விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்வு
மெட்டல் டிடெக்டருடன் நடந்த விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்வு
ADDED : ஆக 31, 2025 10:56 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள வெள்ளக் கிணறு குளத்தில், விநாயகர் சிலைகள் கொண்டு செல்லும் பாதை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையிடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை வடக்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் கடந்த, 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதற்காக வெள்ளக்கிணறு குளத்தில் ஏற்கனவே குழி வெட்டி பாலிதீன் ஷீட்டுகள் பரப்பி செயற்கை குளம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதில் நீர் நிரப்பி, விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக விசர்ஜனம் செய்யப்பட்டன. சிலைகளை கரைக்க ஏதுவாக குளத்தைச் சுற்றிலும் மின்விளக்குகள் போடப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக மதியம் ரோட்டில் இருந்து குளத்துக்கு வரும் பாதையில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை நடந்தது. பின்னர் அந்த வழியாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன. இதுவரை இல்லாத நிகழ்வாக வெள்ளக்கிணறு குளத்து பகுதியில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.