/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு தோறும் விநாயகர் சிலை; விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு
/
வீடு தோறும் விநாயகர் சிலை; விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு
வீடு தோறும் விநாயகர் சிலை; விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு
வீடு தோறும் விநாயகர் சிலை; விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு
ADDED : ஆக 11, 2025 11:10 PM
சூலுார்; சூலுார் ஒன்றிய தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயற்குழு கூட்டம், பெருமாள் கோவில் திடலில் நடந்தது. மாநகர் மாவட்ட இணை செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து, மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார் விளக்கி பேசினார்.
சூலுார் ஒன்றிய மகளிர் அணி சார்பில், வீடு தோறும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவது, ஒவ்வொரு கிளையிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. மூன்று நாட்கள் வழிபாடுகள் செய்த பின், சீரணி கலையரங்கில் விஜர்சன விழா பொதுக்கூட்டம் நடத்திய பின், சூலுாரின் முக்கிய வீதிகள் ஊர்வலமாக சென்று, விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கிருஷ்ண ஜெயந்தி விழாவை சூலுார், பட்டணம் புதூர், பள்ளபாளையம் பகுதிகளில் கொண்டாடுவது எனவும், தொடர்ந்து இந்து மதத்தை இழிவு படுத்தி வரும் தி.க., அமைப்பை தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.