/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
சிறுமுகையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : ஆக 26, 2025 10:29 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் விவேகானந்தர் ஹிந்து பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சிறுமுகையில் விவேகானந்தர் ஹிந்து பேரவை மற்றும் ஊர்ப் பொதுமக்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழாவை கொண்டாடினர். தியேட்டர் மேட்டில் மூன்று முகத்துடன் கூடிய விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்தனர். கணபதி ஹோமத்துக்கு பின்னர் பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவுக்கு விவேகானந்தர் ஹிந்து பேரவை மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். பேரவை சார்பில் சிறுமுகை நகரிலும் சுற்றுப்பகுதி கிராமங்களிலும் 22 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. மூன்று நாட்கள் விழா நிறைவில், 28ம் தேதி மாலை சிறுமுகை நகரில் விசர்ஜன ஊர்வலம் நடத்தி, பழத்தோட்டம் அருகே பவானி ஆற்றில், விநாயகர் சிலைகளை கரைக்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன், சாஸ்தா ராகுல், மனோஜ் உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
சிறுமுகை பழத்தோட்டம் ஊர் பொதுமக்கள் சார்பில், 42ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. முருகர் கோவிலுக்கு செல்லும் வழியில், விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்தனர். 28ம் தேதி மாலையில் விசர்ஜன ஊர்வலம் நடத்தி, பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளனர்.