/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவிலை அகற்ற கூடாது: விவேகானந்தா சேவை மையம் மனு
/
விநாயகர் கோவிலை அகற்ற கூடாது: விவேகானந்தா சேவை மையம் மனு
விநாயகர் கோவிலை அகற்ற கூடாது: விவேகானந்தா சேவை மையம் மனு
விநாயகர் கோவிலை அகற்ற கூடாது: விவேகானந்தா சேவை மையம் மனு
ADDED : செப் 29, 2025 10:21 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, விநாயகர் கோவிலை அகற்ற கூடாது என, விவேகானந்தா சேவை மையம், பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி விவேகானந்தா சேவை மையம், பொதுமக்கள், சப்- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவல்சின்னாம்பாளையத்தில் ரோட்டோரம் விநாயகர் கோவில் உள்ளது. இப் பகுதியில், 60 ஆண்டுகளாக உள்ள கோவிலில் வழிபாடு செய்து வருகிறோம். ரோட்டோரம், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் அமைந்துள்ளது.
இந்நிலையில், இக்கோவிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாத கோவிலை அகற்ற கூடாது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தா சேவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன. சூளேஸ்வரன்பட்டி காந்திபுரம் அருகே விநாயகர் கோவில், ஆவல்சின்னாம்பாளையம் அருகே விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை ரோடு விரிவாக்கத்துக்காக எடுக்க வலியுறுத்துகின்றனர். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கோவிலை மட்டும் அகற்ற வற்புறுத்துவதில் நியாயம் இல்லை. ஹிந்து கோவில்களை மட்டும் எடுக்க வற்புறுத்துவது வேதனையாக உள்ளது. கோவிலுக்கு மாற்று இடம் கொடுக்கும் வரை கோவிலை இடமாற்றம் செய்ய மாட்டோம்.
இவ்வாறு, கூறினார்.