/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி 'பான் கார்டு' தயாரித்த 6 பேர் கும்பல் கரூரில் கைது
/
போலி 'பான் கார்டு' தயாரித்த 6 பேர் கும்பல் கரூரில் கைது
போலி 'பான் கார்டு' தயாரித்த 6 பேர் கும்பல் கரூரில் கைது
போலி 'பான் கார்டு' தயாரித்த 6 பேர் கும்பல் கரூரில் கைது
ADDED : மே 09, 2025 02:31 AM
கோவை:கரூரில், 'ஆதார்' எடுப்பதற்காக போலி 'பான் கார்டு' தயாரித்த ஆறு பேர் கும்பலை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வருபவர்களுக்கு, போலியாக பான் கார்டு தயாரித்து கொடுத்து, அதை வைத்து ஆதார் கார்டு எடுப்பதாக, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பிரிவு எஸ்.பி., பத்ரிநாராயணன், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டார்.
அதில், கரூரை சேர்ந்த கும்பல், போலி பான் கார்டு தயாரித்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார், கரூர் சென்று, போலி பான் கார்டு பயன்படுத்தி, ஆதார் கார்டு பதிவு செய்யும் அலுவலர் கார்த்திக், ஜெயகுமார் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 130 பான் கார்டுகள், மொபைல் போன்கள், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு பேரையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த கும்பல் 2,000 -- 3,000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, பான் கார்டு தயாரித்து தந்ததும், இதுவரை, 1,000க்கும் மேற்பட்டோர் இப்படி போலி பான் கார்டு வாயிலாக ஆதார் கார்டு பெற்றதும் தெரியவந்துள்ளது.