/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு கும்பல் கைவரிசை
/
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு கும்பல் கைவரிசை
ADDED : ஜூலை 02, 2025 09:40 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டியில் அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி. மனைவியுடன் வீட்டில் துாங்கி கொண்டு இருந்தார். அப்போது, மர்மநபர்கள், ஜன்னல் வழியாக தாழ்ப்பாளை திறந்து, உள்ளே சென்று, 10 கிராம் கோல்டு, 7,500 ரூபாய் தொகையை திருடிச் சென்றனர்.
அதே பகுதியில், பாலாஜி என்பரவது வீட்டில், ஜன்னல் வழியாக, வீடு சுத்தம் செய்யும் குச்சியின் வாயிலாக தாழ்ப்பாளை திறக்க முயற்சித்தனர். சப்தம் கேட்டு வீட்டினுள் இருப்பவர்கள் எழுந்ததால், திருட்டு கும்பல் தப்பியோடியது. அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு கும்பல் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.